பாதங்களில் நிறைய வெடிப்புகள் இருந்தால் நடக்கும் பொழுதும் நிற்கும் பொழுதும் கடுமையான வலி இருக்கும். குளிர் காலம் மட்டுமின்றி பருவ கால மாற்றத்தின் போதும் பாத வெடிப்புகள் அதிகரிக்கலாம். பாத வெடிப்புகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது, ஏனெனில் வெடிப்புகள் அதிகரிக்கும்பொழுது இது ஒரு பெரிய பிரச்சனையாகவும் மாறலாம். உங்களை சுமக்கும் பாதங்கள் மீதும் சிறிது அக்கறை கொள்ளுங்கள். பாதங்கள் தானே என்ற அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
உங்கள் பாத வெடிப்புகளை வீட்டு வைத்தியத்தின் மூலம் சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தோல் மருத்துவர் கூறும் இந்த எளிய குறிப்புகளை நீங்களும் பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு முடி அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ்
Celeb Dermatology Clinic இன் நிறுவனர் மற்றும் பிரபல தோல் மருத்துவரான Dr. தீபிகா மிட்டல் குப்தா அவர்கள் இது தொடர்பான தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். பாத வெடிப்புகளை விரைவில் சரி செய்யக்கூடிய எளிய வீட்டு வைத்தியத்தை அவர் பகிர்ந்து உள்ளார். இதை தினமும் செய்து வந்தால் வெடிப்புகள் அற்ற பாத அழகான பாதங்களை பெறலாம்.
பாத வெடிப்பிற்கான காரணம் என்ன?
முதலில் பாத வெடிப்பு பிரச்சனைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- தரையில் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- உடல் பருமனால் கால்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவது.
- அதிக உயரமான ஹீல்ஸ் உள்ள செருப்பு அல்லது ஷூ பயன்படுத்துவது.
- சரும பிரச்சனைகள்.
சில சமயங்களில் பாத வெடிப்புகள் எவ்வித வலியையும் ஏற்படுத்தாது, இருப்பினும் இவற்றை சரியான நேரத்தில் பராமரிக்க தவறினால் பாத வெடிப்புகள் கடுமையாகி இரத்தக் கசிவும் ஏற்படலாம்.
பாத வெடிப்பை சரி செய்யும் வீட்டு வைத்தியம்
வெடிப்புகளற்ற மென்மையான பாதங்கள் பெற பின்வரும் வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்
- முதலில் வெதுவெதுப்பான நீரில் 1 கப் தேனை சேர்த்து நன்கு கலக்கவும்.
- உங்கள் கால்களை இந்த நீரில் வைத்து 15 நிமிடங்கள் உட்காரவும்.
- தண்ணீர் குளிர்ந்த நிலைக்கு வந்தவுடன் உங்கள் கால்களைக் கழுவவும், பின்னர் மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளலாம்.
- வறண்ட மற்றும் சேதமடைந்த பாதங்களுக்கு தேன் சிறந்த தீர்வாக இருக்கும். இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: மாளவிகா அவினாஷ் அழகின் இரகசியம் என்னவென்று தெரியுமா?
பாத வெடிப்புகளுக்கான சில குறிப்புகள்
- உடலில் நீர் சத்து குறைந்தால் சரும வறட்சி ஏற்படும். எனவே தினமும் போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கிரீம் அடிப்படையிலான ஒரு மாய்ஸ்சரைசரை உங்கள் பாதங்களின் மீது தடவவும்.
- கால்களுக்கும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
- வாரத்தில் ஒரு முறையாவது கால்களில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும். இதற்கு பியூமிஸ் ஸ்டோன் பயன்படுத்தலாம். அதிக அழுத்தம் கொடுக்காமல், வெடிப்புகள் மீது மென்மையாக தேய்த்து இறந்த செல்களை அகற்றவும்.
- தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி உங்கள் பாதங்களை முறையாக பராமரிப்பது மூலம் பாத வெடிப்புகளில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik