• Search
Close
எதையாவது தேடுகிறீர்களா?
Search

  Bridal Glow Tricks in Tamil: மணப்பெண்களுக்கான சரும பராமரிப்பு குறிப்புகள்

  இந்த இயற்கை பராமரிப்பின் மூலம், உங்கள் திருமண மேடையில் கூடுதல் அழகுடன் ஜொலிக்கலாம்.
  author-profile
  Published -25 Jan 2023, 09:00 ISTUpdated -25 Jan 2023, 09:39 IST
  Next
  Article
  orange honey scrub for bride

  சரும பராமரிப்பு எவ்வளவு முக்கியம்? 

  மணப்பெண்ணை பற்றி பேசுகையில், சருமப் பராமரிப்பு பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. திருமணத்திற்கான உடை, அலங்காரம் ஆகியவற்றுடன் சரும பராமரிப்பிலும் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலான பெண்கள் கடைகளில் விற்கப்படும் தயாரிப்புகளுக்கு பதிலாக, வீட்டில் இருக்க கூடிய இயற்கையான பொருட்களையே பயன்படுத்த விரும்பிகிறார்கள். இது சருமத்திற்கு பாதுகாப்பானதும் கூட. 

  திருமண நாளில் இயற்கை அழகுடன் ஜொலிக்க என்ன செய்யலாம்? 

  அழகு மற்றும் சரும நிபுணரான ஸ்ரேயா பேலா அவர்களின் அறிவுரைப்படி, மணப்பெண்கள் திருமணத்திற்கு முன் ஆரஞ்சு தோல் மற்றும் தேனை கொண்டு செய்யப்பட்ட ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம். ஆரஞ்சு மற்றும் தேனின் நன்மைகள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகுறித்து விரிவாகப் பார்க்கலாம். 

  தேனின் நன்மைகள் 

  honey

  • தேனில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் உருவாவதை தடுக்கிறது.
  • இது உங்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுகிறது.
  • இது சருமத்த்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றுகிறது. 

  ஆரஞ்சின் நன்மைகள் 

  orange

  • ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்-C நிறைந்துள்ளது, இது சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
  • ஆரஞ்சில் உள்ள தனிமம் சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது.
  • ஆரஞ்சு உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். 

  எப்படி உபயோகிப்பது? 

  orange honey

  • இந்த ஸ்க்ரப் செய்வதற்கு தேவையான அளவு ஆரஞ்சு தோலை எடுத்துக் கொள்ளவும்.
  • ஆரஞ்சு தோலை மிக்சியில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அடுத்ததாக இதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
  • சுமார் 2 முதல் 3 நிமிடங்கள்வரை மசாஜ் செய்த பிறகு காட்டன் பயன்படுத்தி உங்கள் முகத்தைச் சுத்தம் செய்யவும்.
  • இதை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

   

  இந்த பதிவும் உதவலாம்: எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒல்லியா தெரியணுமா?

   

  குறிப்பு - உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால் முதலில் சரும நிபுணரை அணுகவும், அவரை ஆலோசித்த பின்னரே  இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்ய வேண்டும். முக்கியமாக பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள். மேலும் பேட்ச் டெஸ்ட் முடிவில் உங்கள் சருமத்திற்கு சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டாலும் இதனை பயன்படுத்த வேண்டாம். 

  திருமண நாளன்று உங்கள் முகம் கூடுதல் பொலிவுடன் ஜொலிக்க இந்த 2 இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை பராமரிக்கலாம். உங்கள் முகத்தில் கல்யாண கலை கட்டட்டும்.

   

  இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் எண்ணெய் பிசுக்கு சருமத்திற்கு வீட்டிலேயே ஸ்க்ரப் தயார் செய்யலாம்!!!

   

   

  இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

   

  image source: freepik

   

  பொறுப்புத் துறப்பு

  உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com