herzindagi
homemade facial tips tamil

Facial at Home Tips : ரூ.10 இருந்தால் போதும் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி தெரியுமா?

ரூ. 10 செலவில் வீட்டிலேயே எப்படி ஃபேஷியல் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.  குறிப்பாக பெண்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயன் தரும். 
Editorial
Updated:- 2023-06-30, 09:54 IST

sசரும பராமரிப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்று. அவசர உலகில் முகம் மற்றும் சருமத்தின் பாதுகாப்பு, அழகை உறுதி செய்ய சரும பராமரிப்பு விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும்.  சரும பராமரிப்பில் மிகவும் முக்கியமானது ஃபேஷியல்.  தோல் வெடிப்பு, வியர்வையால் கருமை, தூசி படிதல் போன்ற பல பிரச்சனைகள் சரிசெய்ய ஃபேஷியல் பெரிதும் உதவுகின்றன. ஃபேஷியால் செய்வது, செலவு அதிக பணம் செலவாகும் என்றெல்லமா யோசிக்க வேண்டாம். வெறும். ரூ. 10 இருந்தால் போதும் பார்லர் ஸ்டலில் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

க்ளென்சிங் மற்றும் ஸ்க்ரப்பிங்

பார்லரில் ஃபேஷியல் செய்யும்போது முதலில் செய்ய வேண்டியது க்ளென்சிங் மற்றும் ஸ்க்ரப்பிங். நாமும் இந்த வழிமுறையை செய்ய வேண்டும். உங்கள் முகத்தை கழுவிய பின், நீங்கள் ஒரு DIY ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டும்.

 

தேவையான பொருட்கள் (வறண்ட சருமத்திற்கு) 

  • 1 டீஸ்பூன் மசூர் பருப்பு தூள்
  • 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் 

 

தேவையான பொருட்கள் (எண்ணெய் சருமத்திற்கு)

  • 1/2 டீஸ்பூன் பருப்பு தூள்
  • 1 டீஸ்பூன் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் 

உங்கள் சருமத்திற்கு ஏற்ப ஸ்க்ரப் பேஸ்டை தயார் செய்து முகத்தில் தடவி நன்கு ஸ்க்ரபொ செய்யவும். இப்படி செய்வதால்  தோல் புத்துணர்ச்சி அடைந்து ஜொலிக்கும்.  அதேபோன்று கற்றாழை ஜெல் சருமத்தை குளிர்விக்கும். இந்த ஸ்க்ரப் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறைக்கிறது.

 

facial

 

மசாஜ் 

மசாஜ் என்பது வது ஸ்டெப்.  வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதை கவன்மாக செய்ய வேண்டும். 

 

வறண்ட சருமத்திற்கு

மசாஜ் செய்ய தயிர் பயன்படுத்த வேண்டும். கெட்டியான தயிரை பயன்படுத்த வேண்டும், அதில் நீங்கள் லாக்டிக் அமிலம் மற்றும் வைட்டமின் E இரண்டையும் பெறலாம். இதன் மூலம், சருமத்தின் வறட்சி நீங்கும்.

தயிருக்குள் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலக்கலாம், ஆனால் பெரும்பாலானோரின் சருமத்திற்கு மஞ்சள் பொருந்தாது, எனவே மஞ்சள் சேர்பதில் கவன்மாய் இருங்கள்.தயிரைக் கொண்டு மசாஜ் செய்து முடிக்கவும். 

 

எண்ணெய் சருமத்திற்கு

2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்  மற்றும் 1 டீஸ்பூன் செம்பருத்தி பொடியுடன் உங்கள் முகத்தை மசாஜ் செய்யவும்.

இதை வைத்து உங்கள் முகத்தை சில நிமிடங்கள் மசாஜ் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

 

பேஷியல்

இந்த 2 ஸ்டெப்களும் முடிந்த பின்பு முகத்தில் மாய்ஸ்ரைசர், ரோஸ் வாட்டர், சீரம், சன் ஸ்கீரின் இதில் எதாவது ஒன்றை தடவுங்கள். பார்லரில் ஃபேஷியல் செய்தது போன்ற லுக் கிடைக்கும். 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

 

 Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com