தலைமுடி அழகாக இருக்க, அதை நாம் சரியான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம். ஆனால் சரியான விகிதத்தில் புரதச்சத்து முடிக்கு போய் சேர்ந்தால் தான் அது ஆரோக்கியமாக இருக்கும். நம்முடைய ஆரோக்கியமான உணவு பழக்கம் தலைமுடிக்கு போதுமான புரதச்சத்தை வழங்கும் செயலை செய்தாலும், நாமும் இன்னும் கொஞ்சம் கவனத்தை எடுத்து முடியை பராமரித்தால், அது மேலும் மெருகேறும்.
வீட்டில் கிடைக்கும் வேர்க்கடலையை வைத்தே நம் தலைமுடிக்கு போதுமான புரதத்தை நீங்கள் அளிக்கலாம். குளிர் காலத்தில், கடைகளில் வேர்க்கடலை குறைந்த விலையில் கிடைக்கும். அழகு கலை நிபுணர் பூனம் சுக், வேர்க்கடலை நம் தலை முடிக்கு எவ்விதமான நன்மையை செய்கிறது மற்றும் வேர்க்கடலையை வைத்து தலைமுடிக்கு எப்படி புரத சிகிச்சை அளிக்கலாம் என்று கூறுகிறார்.
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
நேஷனல் சென்டர் ஃபார் பயோ டெக்னாலஜி இன்பர்மேஷன் வளைதலத்தில் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் படி, கூறியிருப்பது என்னவென்றால், புரதச்சத்தையும் தாண்டி வேர்க்கடலையில், நம் தலைமுடிக்கு பலன் தரக்கூடிய பல விதமான பொருட்கள் இருக்கின்றன. இதில் போதுமான அளவு மக்னீசியம் மற்றும் வைட்டமின் E இருக்கின்றன. இது மயிர்கால்களை பலப்படுத்துகிறது. வேர்க்கடலையில் பயோடின் அதிக அளவில் உள்ளதால் தலைமுடி வளர்ச்சிக்கு ஏதுவாகிறது. இதில் ஒமேகா3 எனப்படும் கொழுப்பும் இருக்கிறது, அது முடியை அடர்த்தியாக்க உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் தலைமுடியின் தன்மையை மெறுகேற்றுகிறது.
இதுவும் உதவலாம்: வெள்ளை முடி பிரச்சனையை சரிசெய்யும் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்!!
புரோட்டீன் சிகிச்சை தலைமுடிக்கு எவ்வாறு கொடுப்பது?
- 1 கப் வேர்க்கடலை விழுது
- 2 வைட்டமின் இ மாத்திரைகள்
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
எப்படி பயன்படுத்துவது
- முதலில், முதல் நாளே தலைமுடியை அலசி காய வைத்து விடவும். தலைமுடியை அலசி சுத்தம் செய்த பிறகு தான் புரோட்டீன் சிகிச்சை செய்ய வேண்டும்.
- அதன்பிறகு, வேர்க்கடலையை நன்றாக அரைத்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். இதில் வேர்க்கடலை சரியாக மசியாமல் ஒரு துகள் இருந்தாலும், அது முடியின் இடுக்கில் மாட்டி கொள்ளும்.
- இப்போது வைட்டமின் E மாத்திரையின் மருந்தை எடுத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- இந்த கலவையை தலைமுடியின் வேர் கால்களில் நன்கு தடவி விடவும், மேலும் முடி முழுவதும் தடவவும். நம் தலையில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் இந்த சத்து சேரும்படி தடவி கொள்ளவும்.
- அரை மணி நேரம் இந்த கலவையை தலையில் ஊற விட்ட பிறகு, தலைமுடியை அலசவும். முடிந்தவரை, புரத சிகிச்சை தலைமுடிக்கு கொடுத்த அன்று, நீங்கள் தலைமுடிக்கு ஷாம்பு உபயோகிக்க கூடாது.

என்னென்ன நன்மைகள்?
- வேர்க்கடலை சிகிச்சை தலைமுடியின் வறண்ட தன்மையை போக்கி அதை மென்மையானதாக மாற்றும்.
- வீட்டில் தயாரிக்கும் இந்த புரோட்டீன் சிகிச்சை நம் முடியை கொஞ்சம் நீளமாக்கும். அலையலையான முடிக்கு இது பொருந்தும். அதிகமான சுருண்ட முடி இந்த சிகிச்சை பெற்று நீளமாக, நேராக மாறாது.
- நீங்கள் அதிக முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்தால், உங்களுக்கு இந்த சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பு- மேற்கூறிய புரோட்டீன் சிகிச்சை மூலம் உங்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது எங்கள் பொறுப்பல்ல. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சை கொடுத்தால், விரைவில் பலன் கிடைக்கும்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com