மேக்கப் போடுவது பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. கடைகளிலும் பலவகையான மேக்கப் பொருட்களை பார்க்க முடிகிறது. முகத்திற்கு மட்டுமே ஏகப்பட்ட மேக்கப் பொருட்கள் வரிசைக்கட்டி நிற்கிறது. அதே நேரம் இவற்றின் விலைகளும் அம்மாடியோ! என சொல்ல வைக்கிறது. இதனால் சில பெண்கள் அதிக விலை கொடுத்து மேக்கப் பொருட்களை வாங்க தயக்கம் காட்டுக்கின்றனர். சரியான வழிக்காட்டுதல் இல்லாததால் பல நேரங்களில் தவறான பொருட்களை வாங்கி ஏமாந்து விடுகின்றனர்.
இதற்கு சரியான தீர்வு கடைகளில் விற்கப்படும் மேக்கப் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வது. இந்த பதிவில் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய அதாவது வெறும் ரூ. 500க்கு கடைகளில் கிடைக்கும் பிராண்டட் பவுண்டேஷன்களை பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த போகிறோம். எனவே இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:பட்டுப் புடவை வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் தெரியுமா?
கலர்பார் அக்வாஃபீல் பவுண்டேஷன்
இதன் விலை ரூ.550 என்றாலும் தள்ளுப்படி போக ரூ. 413க்கு கிடைக்கிறது. இதில் 5 விதமான ஷேட்கள் உள்ளன. அனைத்துவிதமான இந்தியன் ஸ்கின் டோனுக்கும் பொருந்தி சூப்பரான தோற்றத்தை அளிக்கும். பட்ஜெட் விலையில் பவுண்டேஷன் வாங்க நினைப்பவர்களுக்கு கலர்பார் அக்வாஃபீல் 30 மிலி பவுண்டேஷன் மிகச் சிறந்த தேர்வு.
ஃபேசஸ் கனடா பவுண்டேஷன்
ஃபேசஸ் கனடா 3 இன் 1 ஹைட்ரா மேட் 25 மிலி பவுண்டேஷன் மிகச் சிறந்த பட்ஜெட் பவுண்டேஷன் ஆகும். இதன் ஒரிஜினல் விலை ரூ. 549, ஆனால் தள்ளுப்படி விலையில் இது ரூ. 439க்கு விற்கப்படுகிறது. இதில் மொத்தம் 10 ஷேட்கள் உள்ளன. கிரீம் வகையிலான பவுண்டேஷனை விரும்புவர்களுக்கு இதில் லைட், டார்க் என பல வெரைட்டி ஷேட்கள் கிடைக்கின்றன.
மெபிலின் நியூயார்க் பவுண்டேஷன்
மெபிலின் நியூயார்க் மேட் மற்றும் லிக்விட் பவுண்டேஷனின் 18 மிலி அளவிலான மினி பேக் தள்ளுபடி விலையில் ரூ.244க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.325 ஆகும். இதில் 6 விதமான ஷேட்கள் உள்ளன. இது முகத்திற்கு மீடியம் கவரேஜை தருகிறது.
லேக்மி பவுண்டேஷன்
லேக்மி 9 டூ 5 பிரைமர் + மேட் கவர் பவுண்டேஷன் மிகச் சிறந்த பட்ஜெட் பவுண்டெஷன் ஆகும். இந்த பவுண்டேஷன் பல ஷேட்களில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 16 ஷேட்களில் இந்த பவுண்டஷேன் விற்கப்படுகிறது. இதில் தள்ளுப்படி இல்லாத காரணத்தினால் ஒரிஜினல் விலை ரூ. 500க்கு கிடைக்கிறது.
பட்ஜெட்டில் குறைந்த விலையில் பிராண்டட் பவுண்டேஷனை வாங்க நினைப்பவர்கள் கட்டாயம் இந்த 5 பவுண்டேஷன்களை முயற்சி செய்து பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:டீன் ஏஜ் பெண்கள் அதிகம் விரும்பும் 'One Minute Saree' எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik