பொலிவான, பளபளப்பான சருமத்தின் மீது நீங்கள் ஆர்வம் கொண்டு சருமப் பளபளப்பை மேம்படுத்த விரும்பினால் நீங்கள் கவனிக்க வேண்டியது சரும பராமரிப்பின் உட்பொருள் சாலிசிலிக் அமிலத்தை மட்டுமே. இது எண்ணெய் பசை சருமத்தில் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. பீடா ஹைட்ராக்ஸி அமிலம் பற்றிய 10 முக்கிய பயன்பாடுகளை இங்கே காணலாம்.
இறந்த செல்கள் அடியோடு வெளியேற்றுகிறது
நம் சருமத்தின் மேற்புறத்தில் சீரற்ற மற்றும் இறந்த செல்கள் உருவாகும். இதனால் சருமத்தின் துளைகள் அடைபட்டு விடும். சாலிசிலிக் அமிலம் நம் சருமத்தின் துளைகளில் ஆழமாக ஊடுருவி சென்று இது போன்ற இறந்த செல்களை அழித்து விடுகிறது. மேலும் இந்த அமிலம் நம் சருமத்தின் மேற்புறத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகளை வெளியேற்றுகிறது. இதனால் சருமத்தின் துளைகள் சுத்தமாகவும், சரும அழற்சி இல்லாமலும் இருக்கிறது. இறந்த செல்களை வெளியேற்றி சுத்தப்படுத்துவதால் இந்த அமிலம் நம் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
இதுவும் உதவலாம்: பளபளப்பான சருமத்தை பெற உதவும் கிரீன் டீ இலை!!!
முகப்பருக்களுடன் போராடுகிறது
சாலிசிலிக் அமிலம் அதிகமாக முகப்பருக்கள் பாதித்த சருமத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக நம் மூக்கை சுற்றி உள்ள பகுதிகளில் பிளாக்ஹெட், வயிட்ஹெட் என சொல்லப்படும் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுக்களால் சூழப்பட்டு இருக்கும். இவற்றை வெளியேற்ற இந்த அமிலம் மிக சிறந்த பயனுள்ள பொருளாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான எண்ணெய் மற்றும் சீபம் சுரப்பதால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த அமிலம் இவற்றை எல்லாம் கட்டுப்படுத்துகிறது.
இது லிபோ போலிக் என்பது கூடுதல் சிறப்பு. அப்படியென்றால் இது எண்ணெய் பசை சருமம் மற்றும் அடைபட்ட துளைகள் கொண்ட சருமத்திலும் ஊடுருவி நன்கு சுத்தப்படுத்துகிறது. இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கிறது.
சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் தன்மை
எண்ணெய் சருமம் தான் சரும துளைகள் அடைபடுவதற்கான பொதுவான எதிரி. இதனால் இயற்கையாக சுழற்சி முறையில் உதிரும் நம் சருமத்தின் செல்கள் உதிராமல் போய் விடுகிறது. அதிகப்படியான எண்ணெய் பசை, பாக்டீரியா போன்ற கிருமிகளை தன் பக்கம் ஈர்க்கும் மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இதனால் தோல் அழற்சி ஏற்படுகிறது. இதை பயன்படுத்தும் போது சருமத்தின் இயற்கை எண்ணெய் மற்றும் சீபம் போன்ற கொழுப்பு கலவைகளை சாலிசிலிக் அமிலம் உடைத்து விடுகிறது. இதனால் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை சுத்தம் செய்கிறது மற்றும் சீபம் அளவை குறைக்கிறது.
சிறப்பான ஆஸ்ட்ரிஞ்சன்ட்
சாலிசிலிக் அமிலம் ஒரு சிறப்பான பயனுள்ள ஆஸ்ட்ரிஞ்சன்ட் ஆக செயல்படும் தன்மை கொண்டது. இது சருமத்தில் துவாரங்கள் காணப்படுவதை குறைத்து சருமத்தை இறுக்கமாக்குவதுடன் எண்ணெய் தன்மையை குறைக்கிறது. இதனால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் தோற்றம் அளிக்கிறது. எப்படியிருந்தாலும் சரும எரிச்சல் மற்றும் உலர் தன்மையை போக்க இதை ஆஸ்ட்ரிஞ்சன்ட் ஆக பயன்படுத்துவதற்கு முன் ஒரு தோல் நோய் நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள்.
இதுவும் உதவலாம்: குளிர்காலத்தில் எண்ணெய் பிசுக்கு சருமத்திற்கு வீட்டிலேயே ஸ்க்ரப் தயார் செய்யலாம்!!!
கருந்திட்டுக்களை குறைக்கிறது
சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுக்கள் மற்றும் ஹைபர் பிக்மண்டேஷனை குறைக்கும் ஆற்றல் சலிசிலிக் அமிலத்துக்கு உண்டு எனும் விழிப்புணர்வு அதிகப்படியான மக்களுக்கு இருப்பது இல்லை. இது ஆஸ்ட்ரிஞ்சன்ட் ஆக இருப்பதால் நம் சருமத்தின் தன்மையை சீராக வைக்கும் மற்றும் சருமத்தின் நிறமாற்றத்தை தடுக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.